தமிழ்நாடு

'ஆபரேஷன் காவேரி' மீட்பு பணிக்கு ஒத்துழைக்க நாங்கள் தயார்...முதலமைச்சர் கடிதம்!

Tamil Selvi Selvakumar

'ஆபரேஷன் காவேரி' மீட்பு பணிக்கு ஒத்துழைக்க தயார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் மத்திய அரசின் பணிக்கு ஒத்துழைப்பு அளிப்பது தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், சூடான் நாட்டில் சிக்கித் தவித்து வரும் தமிழ்நாட்டை சேர்ந்த 400 பேர் உள்ளிட்ட இந்தியர்களை தாயகம் அழைத்து வரும் 'ஆபரேஷன் காவேரி' மீட்பு பணிக்கு ஒத்துழைக்க தயார் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், மீட்பு பணியின்போது சூடானில் உள்ள இந்திய தூதரகத்துடன் இணைந்து செயல்பட தமிழ்நாடு அரசு தயாராக உள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.