எதிர்க்கட்சிகளை தன் அதிகார பலத்தால் பொய் வழக்குகளை போட்டு நசுக்க வேண்டும் என்ற தவறான கொள்கையை தி.மு.க. அரசு கையில் எடுத்துள்ளதாக ஓ.பன்னீர் செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், இந்த செயலை கண்டிக்கும் வகையில் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி சட்டசபையில் குரல் கொடுத்தார் என குறிப்பிட்டார். அதற்கு உரிய வாய்ப்பு தராமல் என்ன சொல்கிறார் என்பதை கேட்காமலேயே அடுத்த நடவடிக்கைகளை எடுத்து விட்டதாக தெரிவித்த ஓ. பன்னீர்செல்வம், பொய் வழக்கு போட்டு அச்சுறுத்தி அ.தி.மு.க.வை நசுக்க வேண்டும் என தி.மு.க. அரசு செயல்படுவதாக குற்றம் சாட்டினார்.
எந்த வழக்குகளுக்கும் அஞ்ச மாட்டோம் என சவால் விடுத்த அவர், சட்டப்படி எதிர்கொண்டு வெற்றி பெறுவோம் என்றும், தி.மு.க. அரசின் அராஜக செயலை நாட்டு மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் சட்டசபையை அ.தி.மு.க. இன்று முழுமையாக புறக்கணிக்கும் என்றும் கூறினார்.