தமிழ்நாடு

அமெரிக்காவிற்கு கடத்த இருந்த 14 பழமை வாய்ந்த ஐம்பொன் சிலைகள் மீட்பு....

சென்னை மயிலாப்பூரிலிருந்து அமெரிக்காவிற்கு கடத்த இருந்த 14 பழமை வாய்ந்த ஐம்பொன் சிலைகள், மரசிற்பங்கள் மற்றும் தஞ்சாவூர் ஓவியங்களை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Malaimurasu Seithigal TV

சென்னை மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ராஜகோபாலன் என்பவருக்கு சொந்தமான வணிக வளாக கட்டிடத்தில் வெளிநாட்டிற்கு கடத்துவதற்காக ஐம்பொன் சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அமெரிக்காவிற்கு கடத்த இருந்த  உலோகத்தால் ஆன ராமர், லட்சுமணர், சீதை, அனுமன், கிருஷ்ணன் சிலைகள், மரத்தால் ஆன நாரதர், துவாரபாலகர், நந்தி, கிருஷ்ணர், நடனமாடும் பெண் சிலைகள், தஞ்சாவூர் ஒவியங்ஙள் ஆகியவற்றை பறிமுதல் செய்ததாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை கண்காணிப்பாளர் பொன்னி,தெரிவித்தார்

மேலும் கடந்த மூன்று ஆண்டுகளில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறை மூலமாக சுமார் 45 க்கும் மேற்பட்ட சிலைகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், சென்னையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தக்கூடிய சிலைகள் எந்த கோயிலுக்கு சொந்தமானது. அதனுடைய காலகட்டம், மதிப்பு, சென்னையிலிருந்து யார் வெளிநாட்டிற்கு அனுப்புகிறார்கள்,என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக கடத்தல் தடுப்பு பிரிவு காவல் கண்காணிப்பாளர் பொன்னி தெரிவித்தார்...