தமிழ்நாடு

கல்குவாரி விபத்து - பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு; தற்போது வரை 6வது நபர் மீட்கப்படவில்லை..!

நெல்லை அடைமதிப்பான்குளம் கல்குவாரி விபத்தில் சிக்கிய ஐந்தாவது நபர்  சடலமாக மீட்கப்பட்டார். 

Tamil Selvi Selvakumar

கடந்த 14ம் தேதி பாறைச்சரிவு ஏற்பட்டதில் 6 தொழிலாளர்கள் பாறைகளுக்குள் சிக்கிக் கொண்டனர். இதைத்தொடர்ந்து மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டதை அடுத்து மறுநாள் முருகன் மற்றும் விஜய் ஆகியோர் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.

அதே நாள் மாலையில் செல்வம் என்பவர் மீட்கப்பட்ட நிலையில், அவர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து தேசிய மீட்புப் படையினரின் தொடர் தேடுதலை அடுத்து, லாரி கிளீனர் முருகன் சடலமாக மீட்கப்பட்டார்.

இதனால் பலி எண்ணிக்கை இரண்டாக உயர்ந்தது. 4வது நாளாக மீட்புப்பணி தொடர்ந்த நிலையில், செல்வகுமார் என்பவரும் சடலமாக மீட்கப்பட்டார். ராஜேந்திரன் என்ற 6வது நபர் தற்போது வரை மீட்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.