தமிழ்நாடு

உயர்த்தப்பட்ட பிளாட்ஃபார்ம் டிக்கெட்... மீண்டும் ரூ. 10 ஆக குறைப்பு...

சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணம் மீண்டும் ரூ.10 ஆக குறைப்பு

Malaimurasu Seithigal TV

சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களின் பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணம் மீண்டும் 10 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக, பொது இடங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்க மத்திய அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டது. அதன் ஒருபகுதியாக சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, அரக்கோணம் மற்றும் காட்பாடி ரயில் நிலையங்களில் 10 ரூபாயாக இருந்த பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணம் 50 ரூபாயாக உயர்த்தி தெற்கு ரயில்வே அறிவித்தது.

இந்தநிலையில் இந்த கட்டணம் மீண்டும் 10 ரூபாயாக குறைக்கப் பட்டுள்ளதாகவும், அனைத்து ரயில் நிலையங்களிலும் இதே கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.  இந்த உத்தரவு இன்று முதல் நடைமுறைக்கு வந்தாலும்  பயணிகள் கொரோனா கட்டுப்பாடுகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.