தமிழ்நாடு

இந்திய மாற்றுத் திறனாளி கிரிக்கெட் வீரரை...பேருந்தில் ஏற்றாமல் மிரட்டல் விடுத்த நடத்துனர்!வைரலான வீடியோ!!

Tamil Selvi Selvakumar

இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியின் கேப்டனை அரசுப் பேருந்தில் ஏற்க மறுத்து மிரட்டல் விடுத்த நடத்துனரை பணியிடை நீக்கம் செய்து அரசு போக்குவரத்துக் கழகம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான மதுரையைச் சேர்ந்த சச்சின் சிவா, சொந்த ஊர் செல்வதற்காக சென்னை கோயம்பேட்டில் உள்ள அரசுப்பேருந்தில் ஏறியுள்ளார். அப்போது, இப்பேருந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அனுமதி இல்லை எனக்கூறிய நடத்துனர் ராஜா, அவரை ஏற்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அரசு சலுகைகளின் படி, எங்களுக்கு பேருந்தில் பயணிக்க அனுமதி இருப்பதாக கூறிய சச்சின் பேருந்து முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், என்ன செய்தாலும் தன்னை யாரும் எதுவும் செய்ய முடியாது என தெரிவித்து நடத்துனர் அவரை ஏற்றாமலேயே சென்றதாகத் தெரிகிறது. தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.

இந்நிலையில் மாற்றுத்திறனாளியான இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனை பேருந்தில் ஏற்றாமல் சென்ற நடத்துனர் ராஜாவை பணியிடை நீக்கம் செய்து, அரசு போக்குவரத்துக் கழகம் உத்தரவிட்டுள்ளது.