சென்னை மாதவரத்தில் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய சார்பதிவாளரை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைது செய்துள்ளனர்.
மாதவரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரம் பதிவு செய்வதற்கு சார்பதிவாளர் கிருஷ்ணமூர்த்தி லஞ்சம் கேட்பதாக புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன. லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரின் அறிவுரைப்படி, ரசயானம் தடவிய ரூபாய் நோட்டுகளை அவரிடம் கொடுக்கப்பட்டது. அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் கையும் களவுமாக சார்பதிவாளர் மற்றும் இளநிலை உதவியாளர், துணை பதிவாளர் ஆகியோரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.