தமிழ்நாடு

ராணுவ வீரரின் உடலை வாங்க மறுத்த உறவினர்கள்...!!

Malaimurasu Seithigal TV

மேட்டூர் அடுத்த வனவாசியில் பஞ்சாப் ராணுவ முகாமில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில்உயிரிழந்த கமலேஷ் உடலை வாங்க மறுத்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

வனவாசிபனங்காடு பகுதியை சேர்ந்த கமலேஷ் என்பவர் ராணுவத்தில் பணிபுரிந்து வந்த நிலையில் நேற்று முன்தினம் மர்ம நபர்களால் பஞ்சாப் பதிண்டாவில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தார்.  அவரது உடல் பஞ்சாப்பிலிருந்து விமானம் மூலம் கோவை வந்தடைந்தது.  தற்பொழுது அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் கிராம மக்கள் வீர மரணம் அடைந்த கமலேஷ்க்கு ராணுவ மரியாதை கொடுக்க வேண்டும் என கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.  

இதனால் நங்கவள்ளி ஜலகண்டாபுரம் செல்லும் சாலை சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  ஓமலூர் காவல் கண்காணிப்பாளர் சங்கீதா மேட்டூர் வட்டாட்சியர் முத்துராஜா ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.