நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளா் பட்டியலை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவா் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. இதனிடையே கடந்த வாரம் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் கோவை மாநகராட்சியின் 47 வாா்டுகளுக்கான வேட்பாளா்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், தற்போது, இரண்டாம் கட்டமாக சென்னை, ஆவடி, மதுரை மாநகராட்சிகளுக்கான 51 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.