தமிழ்நாடு

" தனிநபர் ஆக்கிரமிப்புகளை அகற்றுங்கள் இல்லையெனில்...." சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி !!

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அரசு பெண்கள் மேல் நிலை பள்ளியில் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்து பேசிய அமைச்சர்..!

Malaimurasu Seithigal TV

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அரசு பெண்கள் மேல் நிலை பள்ளியில்  போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும்  சிசிடிவி கேமராவினை தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ் ரகுபதி துவக்கி வைத்தார். பின்னர் இதுகுறித்து பேசிய அவர், " அரசு புதிய நலத்திட்டங்கள் கொண்டு வரும்போது அரசாங்கத்திற்கு சொந்தமான  இடத்தை தனி நாபர்கள் ஆக்கிரமித்து வைத்து நீதிமன்றம் செல்கிறார்கள். இதனால் உழவர் சந்தை, மின் மயானம், அரசு கல்லூரிகள் போன்றவற்றை போராடி நமது பகுதிக்கு கொண்டு வரும் போது உரிய நேரத்தில் செயலாற்ற முடியவில்லை.

எனவே அரசுக்கு சொந்தமான நிலங்களை, யாரையும் ஆட்டைய போட விடமாட்டோம். தனிநபர் ஆக்கிரமிப்புகளை அகற்றுங்கள்; இல்லையெனில் நானே நீதிமன்றம் செல்ல வேண்டியது இருக்கும். நூறு நபர்களுக்கு நல்லது நடக்கும் என்றால் இரண்டு  பேர் அதனை பொறுத்துக் கொள்ள தான் வேண்டும் " என மேடையில் சற்று காட்டமாக பேசினார். அதனை தொடர்ந்து போதை விழிப்புணர்வு உறுதி மொழியை,  மாணவருடன் சேர்ந்து எடுத்துக் கொண்டு, பேரணியை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.  இந்த பேரணியானது, பொன்னமராவதி முக்கிய சாலைகள் வழியாக விழிப்புணர்வு பதாகைகளுடன், பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காவல் நிலையம் வரை சென்றடைந்தது.