தமிழ்நாடு

செய்தியாளர்கள் கேள்விக்கு முதல்வரிடம் கோரிக்கை வையுங்கள் என்ற திமுக எம்.பி.!  

Malaimurasu Seithigal TV

சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் துறைமுகம் தொகுதிக்கு உடபட்ட சத்யா நகர் பகுதி மக்களுக்கு   இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கொரோனா  நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த சம்பவத்தின் போது மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உடன் இருந்தார்.

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த  தயாநிதி மாறன் 1000 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினோம். சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வந்தாலும் பசி இருக்க கூடாது என மக்களுக்கு உதவி வழங்கி வருகிறோம் எனக் கூறினார். 

மேலும் மக்கள் உயிரை காப்பாற்றதான் முழுமையான ஊரடங்கு போடப்பட்டுள்ளது.  மக்கள் தனியாக இருந்தால் தான் தொற்று குறையும், மக்கள் ஒத்துழைப்பு மிகவும் முக்கியம் எனக் கூறினார். மேலும் கடந்த சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் மக்கள் திருவிழா கூட்டம் போல் குவிந்தனர் இதனால் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது எனத் தெரிவித்தார். 


அதைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் ஒரு சிலருக்கே அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை உள்ளது. அனைவருக்கும் இந்த கொரோனா நிதி வழங்கப் படுமா என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு?நீங்கள் கோரிக்கை வைத்தால் முதல்வர் அதனை கேட்பார் எனவே முதல்வரிடம் சென்று கோரிக்கை வையுங்கள் என அவர் தெரிவித்தார்.