தமிழ்நாடு

10.5% உள் இடஒதுக்கீடு ஆணைய காலக்கெடு நீட்டிப்பு சமூக அநீதி - ராமதாஸ் கண்டனம்!

Tamil Selvi Selvakumar

வன்னியர் இடஒதுக்கீட்டு ஆணையத்தின் காலக்கெடு நீட்டிக்கப்பட்டது சமூக அநீதி என பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

வன்னியர் இடஒதுக்கீட்டு ஆணையத்தின் காலக்கெடு நீட்டிக்கப்பட்டது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரது அறிக்கையில், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீட்டை வழங்குவது குறித்து அரசுக்கு பரிந்துரைப்பதற்காக தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அளிக்கப்பட்ட காலக்கெடு, மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம் வன்னியர்களுக்கு சமூக நீதி வழங்குவதில் தமிழ்நாடு அரசால் ஏற்படுத்தப்படும் கால தாமதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ள அவர், வரும் மே 31-ம் தேதிக்குள் இடஒதுக்கீட்டு சட்டத்தைப் பேரவையில் நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.