தமிழ்நாடு

மக்கள் மீது அக்கறை காட்டும் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி - 500 மரக்கன்றுகள்

Malaimurasu Seithigal TV

மன்னார்குடி அருகே ஓய்வு பெற்ற ராணுவ வீரர் 500க்கும் மேற்பட்ட  மரக்கன்றுகளை வீடு வீடாக சென்று வழங்கினார் 


மண்ணை காப்பாற்ற மரங்களை நட்டு பாதுகாப்பது அவசியம் . ஆரோக்கியமான உணவிற்கு மண் நன்றாக இருப்பதோடு, அதற்கு அதிக அளவில் மரங்கள் நடவேண்டும். இதன் மூலம் விவசாயம் மேம்பட்டு, சுற்றுச்சூழல் நன்றாக இருக்கும். . மேலும் காடுகளும் குறைந்துள்ளது. அதற்கு மரங்களை அதிகமாக நடுவது அவசியம் குறித்து  பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொங்கல் திருநாளை முன்னிட்டு  திருவாரூர் மாவட்டம்  மன்னார்குடி அருகே எடையர்நத்தம் கிராமத்தை சேர்ந்த  ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கூத்தைய்யா   என்பவர்  சாந்தமாணிக்கம், மெய்ப்பழத்தோட்டம் ,  அசேஷம் , மரவாக்காடு உள்ளிட்ட  கிராமங்களுக்கு சென்று  வீடு வீடாக சென்று  பொதுமக்களுக்கு  சுமார் 500க்கும் மேற்ப்பட்ட  மா,  பூவரசன்,  தேக்கு ,பலா நெல்லி   உள்ளிட்ட வகைகளை சேர்ந்த  மரக்கன்றுகள் வழங்கி பசுமையாக பொங்களை கொண்டாட வலியுறுத்தினார்