தமிழ்நாடு

பல்வேறு கோரிக்கைகளை ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்..!

Malaimurasu Seithigal TV

மருத்துவ காப்பீடு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றாத தமிழ்நாடு அரசை கண்டித்து சென்னையில் ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மருத்துவ காப்பீடு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றாத தமிழ்நாடு அரசை கண்டித்து சென்னையில் ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்லவன் இல்லம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, 

போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படாதது, மருத்துவ காப்பீட்டு திட்டத்தை போக்குவரத்து துறை ஓய்வூதியதாரர்களுக்கு அமல்படுத்தாதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் காத்திருப்பு போராட்டம் பல்லவன் இல்லம் அருகே நடைபெற்றது.

போராட்டத்தில் தமிழக அரசை கண்டித்தும் போக்குவரத்து துறை அமைச்சரை வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.

தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுப்போம் என ஓய்வூதியதாரர்கள் தெரிவித்தனர்.

பல்வேறு காலங்களில் போக்குவரத்து துறையில் இருந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்கள் 500க்கும் மேற்பட்டோர் இந்த தொடர் காத்திருப்பு போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.