தமிழ்நாடு

”உரிமையே தவிர கருணை அல்ல....” ஓபிஎஸ்!!!

Malaimurasu Seithigal TV

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி உயர்வு அரசு ஆணைகளில் மத்திய அரசின் ஆணையை மேற்கோள் காட்டாமல் இருப்பதில் உள்ள ஐயப்பாட்டினை களைய ஓ.பி.எஸ் வலியுறுத்தியுள்ளார். 

இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் மற்றும் அகவிலைப்படி உயர்வை மாநில அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் பெற்று வந்த நிலையில், திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து பங்கம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். 

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு என்பது உரிமையே தவிர, கருணை அல்ல எனக் குறிப்பிட்டுள்ள ஓ.பி.எஸ், மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயரும்  போதெல்லாம் மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்குவதை முதலமைச்சர் உறுதி செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.