“சனாதனத்தை பற்றி தொடர்ந்து பேசி கொண்டு தான் இருப்பேன், நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகும் பேசுவேன்”, என அமைச்சர் உதயநிதி தெரிவித்தார்.
சென்னை கோட்டூர்புரத்தில் பணி ஆனை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், மணிப்பூர் கலவரம் மற்றும் சிஏஜி ஊழலை மறைக்க சனாதன பேச்சை சிலர் திரித்து கூறுவதாக குற்றம்சாட்டினார்.
மேலும் திமுகவை எதிர்ப்பதில் அதிமுக பாஜகவிற்கு இடையே போட்டி நிலவுவதாக கூறிய அமைச்சர் உதயநிதி,ஆளுநர் தனது வேலையை செய்யாமல் தேவையில்லாத அரசியல் செய்து வருவதாக சாடினார்.
இதையும் படிக்க | 024 தேர்தலில் இதன் முடிவு எதிரொலிக்கும்" ஆசிரியர்கள் எச்சரிக்கை!