தமிழ்நாடு

”அனைத்து வரி உயர்வுகளையும் திரும்பப் பெறுக” - எடப்பாடி பழனிச்சாமி

Malaimurasu Seithigal TV

வீட்டு வரி, சொத்து வரியை கடுமையாக உயர்த்தியதோடு மட்டுமல்லாமல் கால தாமதமாக வரி செலுத்துவோருக்கு ஒரு சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்புக்கு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், மின் கட்டணம், பால், மளிகை மற்றும் கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு என கட்டண உயர்வுகளால் மக்கள் துன்பத்திற்காக ஆளாகி வருவதாக தெரிவித்துள்ளார்.

ஆகவே, பொருளாதார சிக்கலில் பொதுமக்கள் சிக்கித் தவித்து வரும் நிலையில், புதிதாக உயர்த்தப்பட்ட ஒரு சதவீத அபராதம் மற்றும் அனைத்து வரி உயர்வுகளையும் திமுக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி உள்ளார்.