தமிழ்நாடு

மக்களே தெரிஞ்சுக்கோங்க...மெட்ரோ பணி காரணமாக வழித்தடங்கள் மாற்றம்...!

Tamil Selvi Selvakumar

மெட்ரோ பணி காரணமாக தாம்பரம் செல்லும் வழிகளில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தாம்பரம் போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சென்னை மேடவாக்கம், சோழிங்கநல்லூர்  உள்ளிட்ட பகுதியில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருவதால் போக்குவரத்து பாதிப்பு அதிகம் காணப்படுகிறது. இதனால் தாம்பரம் போக்குவரத்து காவலர்கள் தாம்பரம் செல்லும் வழிகளில் மாற்றம் செய்துள்ளனர்.

அதன்படி சென்னையிலிருந்து செம்மொழி சாலை வழியாக தாம்பரம் செல்லும் வாகனங்கள் ஜெயச்சந்திரன் அருகே யூ டர்ன் போட்டு  தாம்பரம் செல்லலாம் எனவும், ஒட்டியம்பாக்கம் உள்ளிட்ட பகுதியிலிருந்து தாம்பரம் செல்லும் வாகனங்கள் மேடவாக்கம் மார்க்கம் வந்து பின்னர் ஜெயசந்திரன் சந்திப்பு வழியாக தாம்பரம் செல்லலாம் எனவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த மாற்றங்கள் ஒரு வாரத்திற்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.