தமிழ்நாடு

எஸ். ஆர். எம். குழுமத்தின் சிறப்பு ரயில் சேவை இன்று தொடக்கம்...!

Malaimurasu Seithigal TV

 மத்திய திட்டமான பாரத் கௌரவ் திட்டத்தின் கீழ் எஸ்.ஆர்.எம் குழுமம்,  4 ரயில்களை நாடு முழுவதும் உள்ள ஆன்மீகம்  மற்றும் பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்கு  செல்லும் வகையில்  சிறப்பு ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

குறிப்பாக ஆன்மீக தலங்களான மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள   சீரடி சாய்பாபா கோவில் , கர்நாடக மாநிலத்தில் உள்ள மந்த்ராலயம்  ஸ்ரீ ராகவேந்திரா கோவில், , காஷ்மீர் குலுமணாலி, நியூ டெல்லி
கமாக்யா சண்டிகார் ஹைதராபாத் மைசூர் அயோத்தியா வாரணாசி ஆகிய இடங்களில் சுற்றுலா தளங்களுக்கு செல்லலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.   

மேலும், 14 பெட்டிகள் கொண்ட ரயிலில் 700 பயணிகள் வரை பல்வேறு குழுக்களாக பயணம் செய்ய முடியும் எனவும் மேலும் பயணிகளின் வசதிக்காக ரயில் பெட்டிகளின் உள்புறமும் சில மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் ரயில் பெட்டிகள் அனைத்தும் மிகுந்த  பாதுகாப்பு வசதிகளை உள்ளடக்கியதாக இருக்கிறது எனத் தகல்வல்கள் வெளியாகியுள்ளது. 

முக்கியமாக.  இந்த ரயில் பயணம் செய்ய பயணிகள் பாதுகாப்பை  உறுதி செய்யும் வகையில் சிசிடிவ் கண்காணிப்பு கேமராக்கள்  மற்றும் இலவச வைபை வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.  

அந்தவகையில், இன்று முதற்கட்டமாக ஷீரடிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.