தமிழ்நாடு

“பேருந்து கதவை மட்டும் மூடி இருந்தா போதும்” - அந்த பிஞ்சு உயிரு பிழைச்சிருக்கும்.. யாருடைய அலட்சியம் இது?

அப்போது ராஜதுரை நடத்துனரை அழைத்து பேருந்தின் கதவை மூடச் சொல்லி கூறிய போதும்

Mahalakshmi Somasundaram

தர்மபுரி மாவட்டம் முத்தம்பள்ளி கரங்களூர் பகுதியை சேர்ந்தவர் ராஜதுரை இவருக்கு திருமணமாகி முத்துலட்சுமி என்ற மனைவியும், ஏழு வயதில் ஒரு பெண் குழந்தையும் 9 மாதத்தில் நவினீஸ் என்ற ஆண் குழந்தையும் உள்ள நிலையில், குடும்பத்துடன் கோவையில் உள்ள வளம்பெஸ் பகுதியில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் ராஜதுரை தனது உறவினரின் இறப்பிற்காக குடும்பத்துடன்  காந்த ஒரு வாரத்திற்கு முன்பு சேலம் சென்றுள்ளார். மீண்டும் நேற்று இரவு கோவைக்கு செல்வதற்கு சேலம் பேருந்து நிலையத்தில், கோவையிலிருந்து   

இருந்து சேலம் செல்லும் பாய்ண்ட் டு பாய்ண்ட் அரசு பேருந்தில் ஏறி ஓட்டுநர் இருக்கைக்கு பின்னால் உள்ள இருக்கையில் அமர்ந்துள்ளனர்.

பேருந்தின் முன்பக்க கதவை மூடாமல் பேருந்தை இயக்க தொடங்கியுள்ளார் ஓட்டுநர். அப்போது ராஜதுரை நடத்துனரை அழைத்து பேருந்தின் கதவை மூடச் சொல்லி கூறிய போதும் நடத்துனரும் ஓட்டுனரும் கதவை முடியாமலேயே பேருந்தை இயக்கி சென்றுள்ளார்.

குழந்தை நாவினிஷை தந்தை ராஜதுரை தனது இடது தோளில் சாய வைத்தபடி தூங்க வைத்துள்ளார்.பேருந்து சேலம் மாவட்டம் கத்தேரி வளையக்காரனூர் நெடுஞ்சாலை பகுதியில் சென்று கொண்டிருந்த போது ஓட்டுநர் திடீரென பிரேக் போட ராஜதுரையின் தோளில் உறங்கிக்கொண்டிருந்த குழந்தை நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளது. மேலும் பேருந்தின் கதவு திறக்கப்பட்டு இருந்த நிலையில் குழந்தை பேருந்தை தாண்டி சாலையில் விழுந்துள்ளது.

இதனால் ராஜதுரையும் அவரது மனைவியும் சத்தம் போட ஓட்டுநர் பேருந்தை நிறுத்தி அவர்களை இறக்கிவிட்டு, பேருந்தை இயக்கி சென்றுள்ளார். காயங்களுடன் சாலையில் விழுந்த நாவினிஷை மீட்ட பெற்றோர்கள், பின்னால் வந்த ஒரு காரில் லிப்ட் கேட்டு குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

மருத்துவமனையில் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். ஓடும் பேருந்திலிருந்து 9 மாத குழந்தை தவறி விழுந்து உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்