தமிழ்நாடு

உப்பளத் தொழிலாளர்களின் நீண்டநாள் கோரிக்கை...அரசாணை வெளியிட்ட தமிழ்நாடு அரசு!

Tamil Selvi Selvakumar

உப்பளத் தொழிலாளர்களுக்கான நல வாரியம் அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

உப்பள தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும் என நீண்ட நாட்களாக தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இவர்களின் கோரிக்கையை ஏற்ற தமிழ்நாடு அரசு, அவர்களுக்கான நல வாரியம் அமைத்து  உத்தரவிட்டுள்ளது. 

இந்த நல வாரியத்தில் மற்ற நலவாரியங்களை போலவே, உப்பளத் தொழிலாளர்கள் இலவசமாக உறுப்பினராக பதிவு செய்யலாம் என்றும், தமிழ்நாட்டில் உள்ள பிற நல வாரியங்களைப் போன்றே உப்பளத் தொழில் நலவாரிய உறுப்பினர்களும் இனி கல்வி உள்ளிட்ட அனைத்து உதவித் தொகைகளையும் பெற முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.