தமிழ்நாடு

”அரசமைப்பு சட்டத்தை பாதுகாக்க சனாதன சக்திகளை அப்புறப்படுத்த வேண்டும்” - திருமாவளவன்

Malaimurasu Seithigal TV

அரசமைப்பு சட்டத்தை பாதுகாக்க ஆட்சி பீடத்தில் உள்ள சனாதன சக்திகளை அப்புறப்படுத்த வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

விடுதலை இயக்க புலிகள் தலைவர் பிராபாகரனின் பிறந்தநாளை சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில், கட்சித் தலைவர் திருமாவளவன் கேக் வெட்டி கொண்டாடினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அரசமைப்பு சட்டத்தை பாதுகாக்க ஆட்சி பீடத்தில் உள்ள சனாதன சக்திகளை அப்புறப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

மேலும், சனாதன சக்திகளால் அரசமைப்பு சட்டம் வலுவிழந்து வருவதாகவும், அரசமைப்பு சட்டத்தை பாதுகாப்பதே இந்தியா கூட்டணியின் நோக்கம் என்றும் திருமாவளவன் தெரிவித்தார்.