தமிழ்நாடு

"திமுகவில் உள்ள சனாதனத்தை ஒழிக்க வேண்டும்" - சீமான் விமர்சனம்

Malaimurasu Seithigal TV

சனாதனத்தை ஒழிக்க திமுக நடத்திய போராட்டங்கள் எத்தனை என நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை வளசரவாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்திய பாஜக அரசு, பாரத் என்று அவர்களது நாட்டிற்கு பெயர் வைத்துள்ளதாகவும், தங்கள் நாடு தமிழ்நாடு என்றும் கூறினார்.

இந்தியா, என்பது ஒரே நாடு அல்ல என்று கூறிய சீமான், ஒரே நாடு என்பது உண்மையானால் கர்நாடகாவிலிருந்து ஏன் தண்ணீரைப் பெற முடியவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய சீமான், சனாதன ஒழிப்பு  குறித்து பேசும் திமுக இதுவரை பொதுத் தொகுதியில் பட்டியல் பிரிவினரை தேர்தலில் நிறுத்தியுள்ளதா? என்றும் வினவினார். தொடர்ந்து பேசிய அவர், சனாதனத்தை ஒழிக்க திமுக நடத்திய போராட்டங்கள் எத்தனை எனவும் கேள்வி எழுப்பினார்.