தமிழ்நாடு

மணல் குவாரி ஒப்பந்தக்காரர்கள் வீட்டில் மீண்டும் ED சோதனை...!

Malaimurasu Seithigal TV

தமிழ்நாடு முழுவதும் மணல் குவாரிகளை எடுத்து நடத்தி வரும் தொழிலதிபர்களின் வீடுகளில் அமலாக்கத்துறையினர் மீண்டும் சோதனை மேற்கொண்டனர்.

மணல் குவாரிகளில் சட்டவிரோதமாக பண பரிவர்த்தனை நடைபெற்றதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த  கரிகாலன் மற்றும் திண்டுக்கல் ராமச்சந்திரன் வீடுகள் மற்றும் அவர்களுக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் கடந்த செப்டம்பர் மாதம் சோதனையில் ஈடுபட்டனர். 

அதனை தொடர்ந்து இருவருக்கும் சம்மன் அனுப்பிய நிலையில், இருவரும் ஆஜராகாததால் இரண்டாவது முறையாக அமலாக்க துறையினர் மீண்டும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் புதுக்கோட்டை கறம்பக்குடி மற்றும் கந்தரவகோட்டையில் இந்த சோதனை நடைபெற்றதாகவும் தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகளில் இருவரும் எடுத்த ஒப்பந்தங்கள் குறித்தும், விதிமுறைகளை மீறி அள்ளப்பட்ட மணல் தொடர்பாகவும் விசாரணை  நடைபெறுவதாக கூறப்படுகிறது..

முன்னதாக திண்டுக்கல் ஜிடிஎன் சாலை பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ரத்தினத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். 3 மணி நேரத்திற்கு மேலாக நடத்தி வந்த சோதனை நிறைவு பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.