தமிழ்நாடு

ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா, டி.டி.வி. தினகரன் மலர் தூவி மரியாதை...

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 5-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி மெரினாவில் உள்ள நினைவிடத்தில் வி.கே.சசிகலா மற்றும் டி.டி.வி. தினகரன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

Malaimurasu Seithigal TV

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 5-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் ஜெயலலிதா நினைவிடத்தில் வி.கே.சசிகலா மலர் தூவி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் அமைப்போம் என உறுதி மொழி ஏற்றார்.

முன்னதாக  ஜெயலலிதா நினைவிடத்தில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அமமுக முக்கிய நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். இதையடுத்து ஜெயலலிதா நினைவு தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.