தமிழ்நாடு

அதிமுகவில் தஞ்சமடைந்த தொண்டர்களுக்கு சசிகலா அழைப்பு: செய்வதறியாது திகைக்கும் தலைமை...

அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்தவர்களுக்கு மீண்டும் சசிகலா அழைப்பு விடுத்துள்ளதால் அதிமுக தலைமை செய்வதறியாது விழிபிதுங்கியுள்ளனர்.

Malaimurasu Seithigal TV

ஜெயிலில் இருந்து மாஸாக வெளியே வந்த சசிகலா மீண்டும் அரசியலில் கலக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அரசியலில் இருந்து விலகுவதாக அறிவிப்பு வெளியிட்டது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இருப்பினும் ஓய்வு என்று அவர் அறிவிக்காததால், மீண்டும் அவரது எண்ட்ரி இருக்கும் என தொண்டர்கள் எதிர்பார்த்த நிலையில், கடந்த சில தினங்களாக தொண்டர்களிடம் தொலைப்பேசியில் உரையாடி வரும் ஆடியோ வைரலாக பரவி வருகிறது.

மீண்டும் அரசியலுக்கு வந்து கட்சியை மீட்டெடுக்க வேண்டுமென அவர் ஊட்டிய அமுதால், தொண்டர்கள் ஒருபுறம் மகிழ்ச்சியடைந்தாலும், அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகியோருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாவட்டந்தோறும் சென்று தொண்டர்களை நேரில் சந்திக்கவிருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது கொரோனா பரவல் அதிகரிப்பால் சுற்றுப்பயணத்தை கேன்சல் செய்த சசிகலா, தொண்டர்களை நேரில் வரவழைத்து பேசவிருப்பதாக தெரிகிறது..

அமமுகவை விட்டு வெளியேறி அதிமுகவில் தஞ்சம் அடைந்தவர்களுக்கு  அழைப்பு விடுத்துள்ளதால், ஏற்கனவே தேர்தலில் சரிவை கண்ட அதிமுகவிற்கு மீண்டும் ஒரு பேரிடி ஏற்பட வாய்ப்புள்ளது.கட்சியின் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் செய்தியாளர்களை சந்தித்து உளறி வருவது அவர்களிடம் ஏற்பட்டுள்ள பயத்தையும், களக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் உள்ளது.