சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக ஏற்பட்ட கனமழையின் காரணமாக பல்வேறு தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் வெள்ள நீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வி.கே.சசிகலா பார்வையிட்டு நிவாரண உதவிகளையும் வழங்கி வருகிறார்.
இதன் தொடர்ச்சியாக இன்று செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தொகுதிக்குட்பட்ட இல்லலூர், பெரியார் நகர், பகுதிகளில் வடகிழக்கு பருவ மழையால் பாதிக்கப்பட்ட இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த மக்களை நேரில் சந்தித்த சசிகலா, அவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.