தமிழ்நாடு

எம்.ஜி.ஆரின் சிலையை சேதப்படுத்திய செயலுக்கு சசிகலா கடும் கண்டனம்.!!

தஞ்சாவூரில் எம்.ஜி.ஆரின் சிலையை சேதப்படுத்திய செயலுக்கு சசிகலா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Malaimurasu Seithigal TV

தஞ்சாவூரில் எம்.ஜி.ஆரின் சிலையை சேதப்படுத்திய செயலுக்கு சசிகலா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எம்ஜிஆர் என்ற மாமனிதர், தனது தன்னலமற்ற செயல்களால், எண்ணற்ற ஏழை-எளிய மக்களின் நம்பிக்கை  நாயகனாக இன்றைக்கும் அனைவரின் உள்ளங்களிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று கூறியுள்ளார்.

இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு உரிய தண்டனையை வழங்க வேண்டுமென்றும், தலைவர்களின் சிலைகளை பாதுகாக்க உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.