தமிழ்நாடு

சத்தியமங்கலம் : வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரில் ஆய்வு செய்த அமைச்சர்...!

சத்தியமங்கலம் பவானி ஆற்றங்கரையோரம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகளை வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி நேரில் ஆய்வு செய்தார்.

Malaimurasu Seithigal TV

சத்தியமங்கலம் பவானி ஆற்றங்கரையோரம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகளை வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி நேரில் ஆய்வு செய்தார்.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து 25 ஆயிரம் கன அடி உபரி நீர், பவானி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளதால் ஆற்றங்கரை ஓரம் வசிக்கும் பொது மக்கள் பாதிப்புக்கு உள்ளாகும் நிலை உள்ளது. அதனால் அங்கு வசித்து வந்த பொதுமக்கள், வட்டாட்சியர் அறிவுறுத்தலின் பேரில் தனியார் மண்டபத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்ட, அவர்களுக்கு  உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில்  வெள்ளம் புகுந்த குடியிருப்பு பகுதிகள் மற்றும் தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள பொது மக்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி நேரில் ஆய்வு செய்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் கேட்டிருந்தார்.