தமிழ்நாடு

சத்யா வழக்கு: சக மாணவிகளிடம் ரகசிய வாக்குமூலம் பெற்ற சிபிசிஐடி போலீஸார்!அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

Tamil Selvi Selvakumar

சென்னையில் ரயில் முன் தள்ளி கொலை செய்யப்பட்ட மாணவி சத்யா வழக்கு தொடர்பாக சக மாணவிகளிடம் ரகசிய ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவி கொலை:

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கடந்த அக்டோபர் 13 ஆம் தேதி ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த சத்யா என்ற மாணவி, சதீஷ் என்ற நபரால் ரயில் முன் தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்டார். 

காதலன் கைது:

மாணவி கொலை செய்யப்பட்டதையடுத்து, தலைமறைவான காதலன் சதீஷ் போலீசாரால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, காவல்துறையினர் சதீஷிடம் விசாரணை மேற்கொண்டதில் ”எனக்கு கிடைக்காத சத்யா வேறு யாருக்கும் கிடைக்க கூடாது” என்பதற்காக தான் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்ததால் சதீஷை சென்னை புழல் சிறையில் அடைத்தனர். அதன்பிறகு, இந்த வழக்கானது சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

சக மாணவிகளிடம் ரகசிய வாக்குமூலம்:

இந்நிலையில் சம்பவத்தை நேரில் பார்த்த சக மாணவிகள் 4 பேரிடம் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ரகசிய ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக சிபிசிஐடி போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், நாளை சத்யாவின் தாய் மற்றும் உறவினர்களிடம் விசாரணை மேற்கொள்ளவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.