தமிழ்நாடு

என் மகனை காப்பாற்றுங்க... கதறும் பெற்றோர், அலட்சியம் செய்யும் மருத்துவமனை

Malaimurasu Seithigal TV

சென்னை திருவொற்றியூரில் தன் குழந்தையை காப்பாற்றுங்கள் என பெற்றோர் கதறும் நிகழ்வு காண்போரை கண்கலங்கசெய்கிறது. 

திருவொற்றியூரை சேர்ந்த தம்பதிகளான வினோத்-பிரியா ஆகியோர் அப்பகுதியில் கட்டுமான தொழில் செய்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு  9 வயதில் எபினேசர் என்ற மகன் உள்ளார். இந்த சிறுவனின் முகத்தில் இருபுறமும் வீங்கி இருப்பதால் அவனால் மூச்சுவிட முடியவில்லை.

தற்போது தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை மட்டுமே பார்த்து வருவதால் மற்ற நோய்களுக்கு சிகிச்சை பெறுவது பெரும் சவாலாக இருந்து வருகிறது. எனவே மூச்சுவிட முடியாமல் தவிக்கும் சிறுவன் எபினேசரை தூக்கிக்கொண்டு அவரது பெற்றோர் மருத்துவமனைகளாக ஏறிச்சென்றாலும் யாரும் அவனுக்கு சிகிச்சை அளிக்க முன்வரவில்லை.

இதனால் மனமுடைந்த அவர்கள், தங்களது மகனுக்கு உதவுங்கள் என சமூகவலைதளங்கள் வழியாக கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர்.