தமிழ்நாடு

நேரடி வகுப்பிற்கு கட்டாயப்படுத்தும் பள்ளிகள்...  கடுமையான நடவடிக்கை - உயர்நீதிமன்றம் எச்சரிக்கை...

மாணவர்களை நேரடி வகுப்பில் பங்கேற்க கட்டாயப்படுத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை எச்சரித்துள்ளது.

Malaimurasu Seithigal TV

9 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் நேரடி வகுப்புகளுக்கு செல்ல தடை விதிக்க கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில் 18வயதுக்கு கீழானோருக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாத நிலையில்,  பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால், மாணவர்கள் கூட்டமாக பள்ளிக்கு செல்வதாகவும், சமூக இடைவெளி பின்பற்றாத நிலை காணப்படுவதாகவும் கூறப்பட்டது.

சில பள்ளிகள் மாணவர்களை நேரடி வகுப்புகளில் கலந்து கொள்ள கட்டாயப்படுத்துவதாகவும் கூறப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் துரைசுவாமி, முரளிசங்கர் ஆகியோர் அமர்வு, மாணவர்களை கட்டாயப்படுத்தும் பள்ளிகளின் விவரங்கள் தெரிவிக்கப்பட்டால் அரசு நடவடிக்கை என கூறினர்.

மேலும் இதுதொடர்பாக தமிழக முதன்மை செயலர், பள்ளிக்கல்வித்துறை செயலர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பர் 30ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.