தமிழ்நாடு

காயங்களுடன் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய கடல் பசு...!

திருச்செந்தூர் ஐயா வைகுண்டர் அவதாரப் பதி, கடற்கரையில் காயங்களுடன் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய கடல் பசு...

Malaimurasu Seithigal TV

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அருகில் உள்ள ஐயா வைகுண்டர் அவதாரப்பதி கடற்கரையில் சுமார் 100 கிலோ எடை உள்ள கடல் பசு ஒன்று முகம் மற்றும் உடம்பில் காயங்களுடன் இறந்த நிலையில் கரை ஒதுங்கி உள்ளது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், கால்நடை மருத்துவர் மூலம் பிரேத பரிசோதனை செய்து கடற்கரையில் அடக்கம் செய்தனர். மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே போல் கடல் பசு ஒன்று சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் இதே போன்று காயங்களுடன் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது குறிப்பிடத்தக்கது. இந்த கடற்பசுவை பார்த்த பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்போனில் படம் பிடித்து சென்றனர்.