நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் மீது நடிகை அளித்த புகாரின் பேரில் வளசரவாக்கம் போலீசார் சீமான் இன்று ஆஜராகுமாறு சம்மன் அனுப்பிய நிலையில் அவரது வழக்கறிஞர் சங்கரன் காவல் நிலையத்தில் ஆஜராகி பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது சீமான் மீது கடந்த 2011 ஆம் ஆண்டு நடிகை கொடுத்த புகார் இரண்டு முறை வாபஸ் பெறப்பட்டது கடந்த 23 ஆம் ஆண்டு செப்டம்பர் இதேபோல் சீமான் அவர்களுக்கு சமன் அனுப்பிய நிலையில் அவர் மூன்று முறை ஆஜராகி எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளித்தார் தற்பொழுது அரசியல் அழுத்தம் காரணமாக சீமான் அவர்களுக்கு காவல் நிலையத்தில் ஆஜராகவுக்கும் படி சமன் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கட்சியின் கட்டமைப்பு மேம்படுத்துவதற்காக சுற்றுப்பயணம் சென்றுள்ளதாகவும் சம்மன் மீது அவர் ஆஜராக குறைந்தபட்சம் நான்கு வாரம் அவகாசம் வேண்டும் என்று எழுத்து பூர்வமாக காவல் நிலையத்தில் கொடுத்துள்ளதாகவும் அவரது வழக்கறிஞர் தெரிவித்தார் மேலும் உயர் நீதிமன்றம் சீமான் மீதான பாலியல் வாழ்க்கை 12 வாரங்களுக்குள் குற்ற பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டுமென குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரிய வழக்கு விசாரணையில் உள்ளது என்றும் தொடர்ந்து அரசியல் அழுத்தம் காரணமாக அவர் மீது குற்றம் சாட்டி வருவதாக அவரது வழக்கறிஞர் சங்கரன் தெரிவித்தார்.