seeman  
தமிழ்நாடு

“அணிலே அணிலே ஓரமா போய் விளையாடு அணிலே...” - விஜய்யை கலாய்த்து தள்ளிய சீமான்!!

அணில் என கலாய்ப்பதன் மூலம் தவெக உறுப்பினர்களை முதிர்ச்சியற்றவர்களாகவும், அனுபவம் இல்லாதவர்களாகவும் ...

Saleth stephi graph

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் கோனேரி கொன் கோட்டை மீட்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது, இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், தமிழக வெற்றி கழகத்தை சரமாரியாக தாக்கினார், மேலும் விஜயின் ரசிகர்களை அணில் குஞ்சு என்ற சொல்லி சிரிப்பலையை ஏற்படுத்தியிருந்தார்.

“தமிழக வெற்றிகளாக தொண்டர்களிடம் உங்கள் கொள்கை என்னவென்று கேட்டால், தளபதி, தளபதி, தளபதி என்பார்கள்..ஆனால் எனக்கு தலைவிதி..தலைவிதி என கேட்கிறது. செரி பா உங்கள் கொள்கைதான் என்ன!? என்று கேட்டால் அவர்களுக்கு தெரியாது.  சரி சரி..எதற்காக வந்தீர்கள் என்று கேட்டால், TVK tvk என கத்துகின்றனர், ஏன்டா டீ விக்கவா இவ்வளவு தூரம் வந்தீர்கள்..செரிங்க பா ஓரமா போய் டீ வித்துக்கோங்க பா ” என சொன்னபோது அரங்கமே ஒரே சிரிப்பலையால்  நிறைந்தது.

விஜயின் ரசிகர்களை அணில் என ஏற்கனவே இணையத்தில் கலாய்த்து வருகின்றனர். இந்நிலையில் விஜயின் ரசிகர்களை அணில் என கலாய்த்த சீமான், “அணிலே அணிலே பத்திரமா ஓரமாய் போய் விளையாடு அணிலே, இந்த அணில் வேற குறுக்கையும் மறுக்கையும் ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரு மானையோ,  எருமையையோ வேட்டையாடி சாப்பிட்டால் புலிக்கு மரியாதை.. அணில் -ஐ கொன்று என்ன செய்வது!?” என பேசியுள்ளார்.

அணில்  என கலாய்ப்பதன் மூலம் தவெக உறுப்பினர்களை முதிர்ச்சியற்றவர்களாகவும், அனுபவம் இல்லாதவர்களாகவும் சீமான் குறிப்பிட்டு கலாய்த்து பேசியிருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே பல காலமாக அணில் என்ற பட்டத்துடனையே வாழும் விஜய் ரசிகர்களையும், தவெக தொண்டர்களையும் இது மேலும் கடுப்பேற்றியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.