இன்று சென்னை பல்லாவரத்தில் நடந்த நாம் தமிழர் கட்சியின் புதிய உறவுகள் இணையும் விழாவில் பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழ் மொழியின் இன்றைய நிலை குறித்து திமுக மற்றும் தவெக அரசு குறித்த விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார். “மாற்றம் என்பது சொல் அல்ல செயல் இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி.. இந்த முழக்கத்தை முன்வைத்து நாம் முன்னேறி செல்கின்றோம். வெற்றி பெற்ற அரசியல் கட்சிகளை அதிகாரத்தில் இருப்பவர்களை நோக்கி எல்லாரும் சென்று இணைவது வழக்கம். ஆனால் இந்த இயக்கத்தை நோக்கி ஆயிரம் பேருக்கு மேற்பட்டோர் வந்து இணைவதற்கான நோக்கம் என்ன.. சரியானதை செய்ய நினைக்கிறார்கள் எனவே இங்கு வந்து சேர்ந்திருக்கிறார்கள்.
நீண்ட காலமாக கவனித்து வருவதில் இந்த தமிழ் மண்ணில் சில சொற்கள் மிக வலுவிழந்து அவமதிக்கப்படுகிறது. ‘மாற்றம்,புரட்சி,தளபதி,வரலாறு’ அறுபடை வீடு கொண்ட நம் தமிழுக்கு போராடிய தலைவனே தளபதி என்று போட்டுக் கொள்ளவில்லை. புதிதாக வந்தவர்கள் நம் அரசியலை புரிந்துகொள்ளவேண்டும். நாம் தமிழர் ஒரு அரசியல் கட்சி கிடையாது. இது இளைஞர்களின் எழுச்சி.. தமிழ் தேசிய இனத்தின் விடுதலைக்காக கட்டமைக்கப்பட்ட புரட்சிகர அரசியல் ராணுவம். ரத்தம் சிந்தாத அரசியல் போரை இங்கு செய்து கொண்டிருக்கிறோம். தன் தாய்மொழியில் ஆகச்சிறந்த இலக்கியங்களை தங்கள் தாய்மொழியிலேயே படிக்க கூடிய பெருமையை உடையவர்கள் தமிழர்கள்.
நல்ல தமிழில் நீங்கள் பேசினால் அவர்கள் உங்களை நாம் தமிழர் கட்சியா என்று கேட்பார்கள்..உன் தாய்மொழியை கொன்று புதைத்தார்கள் திட்டமிட்டார்கள்…தமிழ் அறிவியல் மொழி இல்லை என்றார்கள் நம்பினீர்கள்.. தமிழன் இல்லாதவரிடம் நாட்டை கொடுத்து எங்களை அடிமையாகிவிட்டார்கள்.. நடிகனுக்கும் தலைவனுக்கும் வித்தியாசம் தெரியாத கூட்டம்.. புறம் பேசுவீர்கள்.. வேறு என்ன செய்யமுடியும்.. திரள் நிதி திருடன் என்பார்கள்.. முன்னாடி சொன்னர்வகள் திருட்டு நிதிக்காரர்கள்.. இப்போது சொல்பவர்கள் கள்ளச்சந்தையில் திரைப்படம் பார்க்கும் டிக்கெட்களை விற்றவர்கள். ஆட்டம் மாறி மாறி தான் ஆடுவார்கள்.. உங்களிடம் இருக்கும் பந்து எங்களுக்கும் வரும் பார்த்து தான் ஆட வேண்டும்.. மக்களிடம் நான் வலிமையை கேட்கிறேன்.. உலகம் முழுக்க எங்களை நேசிக்க எத்தனை மக்கள் இருக்கிறார்கள்… நாங்கள் வேண்டாம் என்று சொல்லி அமைதியாக இருக்கிறோம்” என பேசி திரள் நிதி குறித்த விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.