தமிழ்நாடு

"ஆசிரியர் பணிக்கான வயது வரம்பு உயர்வு, ஏமாற்று வேலை" சீமான் விமர்சித்துள்ளார்!

Malaimurasu Seithigal TV

ஆசிரியர் பணிக்கான வயது வரம்பு உயர்வு என்பது ஏமாற்று வேலை என நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 

கள்ளக்குறிச்சி மாவட்டம் ஏமப்பேர் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு ஊக்க தொகை வழங்க நிதி இல்லாததை காரணம் காட்டி இந்த வயது வரம்பு நீட்டிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். 

மேலும், இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்து விமர்சித்த சீமான், படித்து முடித்து வேலையில்லாமல் இருக்கும் ஆசிரியர்களுக்கும், கொரோனா காலகட்டதில் பணிபுரிந்த  செவிலியர்களுக்கும்  வேலை கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும் தடையற்ற மின்சாரம் குடிநீர் கொடுக்காமல் மக்களை வாட்டி வதைக்கும் ஆட்சியாளர்கள், மின்கட்டணத்தை உயர்த்தியிருப்பது கண்டிக்கத்தக்கது என சீமான் ஆவேசம் தெரிவித்தார்.