தமிழ்நாடு

“கூட்டணி என்பது சீட்டணி நோட்டணியாக மாறியுள்ளது…தமிழன் ஆளும் போது தான் தமிழ் மீளும்” - மாநாட்டில் சீமான் அனல் பறக்க பேச்சு!

உலகில் தனித்து நின்று வளர்ந்து வளர்ந்து வருவது நாம் தமிழர் கட்சி.. நின்ற எல்லா தேர்தலிலும் தோற்றோம்...

Mahalakshmi Somasundaram

திருச்சியில் நடக்கும் 234 தொகுதிகளின் வேட்பாளர்கள் அறிமுக மாநாட்டில் பேசி வரும் நாம் தமிழர் கட்சி சீமான் “தான் சார்ந்த கட்சிகளுக்காக கூடிய தமிழன் வணங்குகிற சாமிக்காக கூடிய தமிழன் முதன் முதலாக தான் பிறந்த தமிழன் என்ற இனத்திற்காக கூடி இருக்கிறான் என்பது ஒரு படிநிலை பாய்ச்சல்.. நாங்கள் யார் உங்கள் பிள்ளைகள் இங்கு கூடியிருக்கிறவர்கள் தலைவர்கள் தொண்டர்கள் என கூடவில்லை நாங்கள் தமிழர்கள் ஒருத்தியின் பிள்ளைகள் என்ற உணர்வோடு கூடி இருக்கிறோம். நாங்கள் உங்களிடம் இருந்து உங்களுக்காக வந்தவர்கள் எங்கள் வருங்கால பிள்ளைகளுக்காக வந்தவர்கள். எண்களின் அரசியல் இதுவரை இந்த நிலத்தில் இருக்கின்ற அரசியலில் இருந்து முற்றிலும் மாறுபட்டது, அரசியல் என்பது ஒரு வாழ்வியல் என்ற புரிதலுடன் காலத்திற்கு வந்தவர்கள் நாங்கள். 

ஒரு மனிதனின் பிறப்பில் இருந்து இறப்பு வரை அனைத்தையும் தீர்மானிப்பது அரசு அந்த அரசை தீர்மானிப்பது அரசியல். எமது உரிமையை எமது விடுதலையை நாங்களே போராடி பெறுவது என்ற உயர்ந்த நோக்கத்தோடு காலத்திற்கு வந்தவர்கள் எம்மீது பிள்ளைகள். எங்களுடைய கனவு ஆள் மாற்றம் அரசியல் மாற்றம் அல்ல ஆட்சி முறை மாற்றம் அதனால் தான் அடிப்படை அமைப்பு அரசியல் மாற்றம் எங்கள் நோக்கம். பகத்சிங் சொன்னது போல ஒரு புதிய சமூகம் வேண்டும். இங்கு அரசியல் என்பது தேர்தலுக்காக கட்டமைக்கப்பட்டுள்ளது மக்களுக்காக இல்லை. எங்கள் கனவு ஆண்களின் இலக்கு எங்கள் திருநாட்டில் எங்கள் நல்லாட்சி தான். 

பசி, பஞ்சம் , ஊழல், லஞ்சம், கொலை, கொள்ளை, சாதி இழிவு, தீண்டாமை பெண்ணிய அடிமைத்தனம், பாலியல் வன்கொடுமை, மது, மதப்போர் இது எதுவும் இல்லாத தேசியத்தை உருவாக்குவோம் என்ற நோக்கத்தோடு காலத்திற்கு வந்தவர்கள். இது தமிழ்நாடு இது தேசம் தமிழ் தேசம் இங்கு வாழ்கின்ற மக்களின் பண்பாடு, மொழி, கலை, வழிபாடு எல்லாவற்றையும் காக்கும் அரசியல் தமிழ் தேசிய அரசியல்.. கொள்கை தெளிவு குழப்பம் இல்லாத முடிவு. உலகில் தனித்து நின்று வளர்ந்து வளர்ந்து வருவது நாம் தமிழர் கட்சி.. நின்ற எல்லா தேர்தலிலும் தோற்றோம் ஆனால் மேலும் அதே வெறியுடன் அடிபட்ட புலி போல அடிமைப்பட்ட இனத்தை போல எழுந்து நிற்கின்றோம். 

இங்கும் கூட்டணி என்பது சீட்டணி நோட்டணியாக மாறியுள்ளது, நாங்கள் வியாபாரம் செய்ய தயாராக இல்லை, எங்களுக்கு வேண்டியது அரசியல் விடுதலை அதற்காகவே தனித்து தனித்து அரசியலில் நிற்கிறோம். எந்த மக்களுக்காக வந்தோமோ அதே மக்களுடன் களத்தில் நிற்கின்றோம். அறிவார்ந்த தமிழ் பிள்ளைகளே நாம் நமது தாயை தொலைத்தவர்கள். ஒரு நாட்டை அழிக்க மொழியை அழித்தால் அந்த இனம் அழிந்து விடும் அது போல என் இனத்தை அழித்து விட்டார்கள். தமிழன் நாட்டில் தமிழ் இல்லை, அதிகாரத்தில் இல்லை, ஆட்சியில் இல்லை, பேச்சு மொழியாக இல்லை, வழிபாட்டில் இல்லை. முதலில் பயிற்று மொழியாக இருந்தது பட மொழியாக மாறியது இப்போது விருப்ப மொழியாக மாறி கண் முன்னே அழிந்து போனது..  

இப்பொது இங்கு தமிழர்கள் இல்லை.. நாம் தமிங்கிழர்கள்.. சிதைந்து அழிந்து கொண்டிருக்கும் நமது மொழியை மீட்டுருவாக்கம் செய்யும் கடமை ஒவ்வொருவருக்கும் உண்டு.. இது ரசிகர் கூட்டம் இல்லை.. லட்சிய கூட்டம். தமிழன் ஆளும் போது தான் தமிழ் மீளும்…”  என தமிழ் இனம் அழிந்து வருகிறது என பேசிவருகிறார். 

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.