தமிழ்நாடு

உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து சென்ற 2 1/2 லட்சம் மதிப்புடைய 86 பட்டு புடவைகள் பறிமுதல்

கும்பகோணம் அருகே திருப்பனந்தாளில் உரிய ஆவணங்கள் இன்றி 2 1/2 லட்சம் மதிப்புடைய 86 பட்டு புடவைகளை தேர்தல் பறக்கும் படை பறிமுதல் செய்தனர்.

Malaimurasu Seithigal TV

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து திருவிடைமருதூர் தாலுகா திருப்பனந்தாள் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருப்பனந்தாள் பகுதியில் பறக்கும்படை அலுவலர் ராஜதுரை தலைமையிலான குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அவ்வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டபோது,  அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் உட்கோட்டை பகுதியை சேர்ந்த அறிவழகன் என்பவர் 2 1/2 லட்சம் மதிப்புடைய 86 பட்டுப்புடவைகளை உரிய ஆவணங்கள் இல்லாமல் காரில் எடுத்து வந்துள்ளார். இதையடுத்து அந்த 86 பட்டுப்புடைவளை பறிமுதல் செய்து திருவிடைமருதூர் வட்டாட்சியரிடம் தேர்தல் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர். கோட்டாட்சியர் உத்தரவுப்படி கருவூலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.