வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் மாதவரம் நெடுஞ்சாலை ஜமாலியா பகுதியில் நடைபெற்று வரும் புதிய குடியிருப்பு பணிகள், ராஜா தோட்டத்தில் நடைபெற்று வரும் புதிய குடியிருப்பு திட்டப்பணிகள், கொளத்தூர் பேப்பர் மில் சாலையில் சிஎம்டிஏ சார்பில் கட்டப்பட்டு வரும் புதிய நவீன சந்தை மற்றும் புதிய வட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட திட்ட பணிகளை இந்து சமய அறநிலைத்துறை அமைச்சரும் சென்னை பெருநகர வளர்ச்சி குழும தலைவருமான சேகர்பாபு மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டர் ஆய்வு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய, வடசென்னை வளர்ச்சி திட்டத்தில் சுமார் 6,039 கோடி மதிப்பீட்டில் 82 பணிகள் தமிழக முதலமைச்சரால் வடிவமைக்கப்பட்டு அந்த பணிகள் நடைபெறுகிறது.
அந்த பணிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றமும் டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க விட வேண்டிய பணிகளை கலாய்வு செய்து வருகிறோம்.
அதேபோல சென்னை பெருநகர குழுமத்தின் 975 கோடி 45 பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன.
கொளத்தூர் தொகுதியில் மக்கள் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்று வகையில் கட்டமைப்புகளான சார்பதிவாளர் அலுவலகம் அதோடு இணைந்து வட்டாட்சியர் அலுவலகம் படிப்பகம் உருவாக்குகின்ற முயற்சியாக 40 கோடி செலவில் அமைய உள்ளதாக தெரிவித்த அமைச்சர்,
நடைபெறுகின்ற பணிகள் தரமாகவும் குறிப்பிட்ட காலத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காக இந்த ஆய்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்றார்.
தொடர்ந்து பேசியவர் வடசென்னை வளர்ச்சி என்பது முதலமைச்சரின் கனவாக இல்லாமல் நினைவாக இருக்கும்...
எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர்,
அதிமுக ஏற்கனவே ஒழிந்து கொண்டிருக்கிற கட்சி அந்தக் கட்சியை முழுமையாக எடப்பாடி பழனிச்சாமி ஒழித்து விட்டார். எடப்பாடி பழனிச்சாமி நாங்கள் எதிரியாக பார்க்கவில்லை உதிரியாக பார்க்கிறோம்.
அதிமுக பொதுச்செயலாளராக அவர் பொறுப்பேற்றதிலிருந்து தமிழக மக்கள் அவருக்கு கொடுத்தது தோல்விதான்..
அதே நேரத்தில் எங்கள் தலைவர் பொறுப்பேற்றதிலிருந்து அவருக்கு மக்கள் வெற்றியை மட்டுமே பரிசாக கொடுத்து வருகிறார்கள் அதனால் 2026 இல் பலமான இந்த கூட்டணி 200 அல்ல அதற்கு மேற்பட்ட தொகுதிகளில் வெல்லும்.. அதை நாளைய சரித்திரம் சொல்லும் என்றார்.