திமுக தேச விரோத ஆட்சி இல்லை தேசிய ஆட்சி
சென்னை கிழக்கு மாவட்டம் எழும்பூர் வடக்கு பகுதியான புளியந்தோப்பு, மோதிலால் தெரு மற்றும் சூளை, தட்டான்குளம், நல்லமுத்து தெரு ஆகிய பகுதிகளில் அன்னம் தரும் அமுதக்கரங்கள் நிகழ்வில் பொதுமக்களுக்கு அன்னதான உணவுகளை அமைச்சர் சேகர்பாபு வழங்கினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது
அன்னம் தரும் அமுதக்கரங்கள் நிகழ்வில் தினமும் ஆயிரம் நபர்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. மக்கள் மகிழ்ச்சியாக உணவுகளை பெற்று வருகிறார்கள்.
திமுக ஆட்சியின் அவலங்கள் வெளிப்படக் கூடாது என்பதற்காக தான் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் புதிய புதிய பிரச்சனைகளை உருவாக்கி மக்களை திசை திருப்புகிறார்கள் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியது குறித்தான கேள்விக்கு,
அவர் வருகிற போதெல்லாம் தமிழகத்தில் ஏதாவது பிரச்சனையை உருவாக்கி திசை திருப்பலாம் என நினைக்கின்றார். இங்கே வந்தால் தமிழை விரும்புகிறேன் என்பார் உத்தரபிரதேசம் போனால் இந்திய விரும்பவேன் என்பார் எனவும் இரட்டை நாக்கு கொண்டவர்கள் பேச்சுக்கெல்லாம் தமிழக மக்கள் செவிசாய்க்க மாட்டார்கள் எனவும் புதிய பிரச்சனைகளை முதலமைச்சரும் துணை முதல்வரும் எப்படி உருவாக்குகிறார்கள் என்றால் மக்கள் பயனடைகின்ற மக்கள் நலத்திட்டங்களுக்காக புதிய புதிய பிரச்சனைகளை கையில் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் அதிலிருந்து எப்போதும் பின் வாங்க மாட்டார்கள் அது ஏதாவது பிரச்சனை என உள்துறை அமைச்சர் கருதுவார் என்றால் அந்த பிரச்சனையை தொடர்ந்து செய்யும் என தெரிவித்தார்.
LKG UKG மாணவர்கள் போல மத்திய, மாநில அரசுகள் சண்டை போட்டுக்கொள்கிறது என தவெக தலைவர் விஜய் பேசியது குறித்தான கேள்விக்கு,
பல PHD முடிச்ச கட்சி இந்த கட்சி என தெரிவித்தார்.
நேற்று மகா சிவராத்திரி எப்படி நடந்தது என்ற கேள்விக்கு,
கோலாகலமாக நடந்தது. அதில் கூட எங்கேயாவது பிரச்சனையை உருவாக்கலாம் என சங்கிகள் நினைத்துப் பார்த்தார்கள் நடைபெறவில்லை. மயிலையில் ஆரம்பித்து இந்த சிவராத்திரி விழா 9 திருக்கோவில்களில் இந்து சமய அறநிலை துறை சார்பாக சிவராத்திரி நடந்து முடிந்திருக்கிறது. வருங்காலங்களில் இன்னும் அதிக கோவில்களில் சிவராத்திரி விழா நடைபெறும். தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய சிவன் கோவில்களில் வெகு விமர்சையாக மகா சிவராத்திரி நடந்து முடிந்தது. தானும் இரவெல்லாம் கண்ணு விழித்து பட்டிமன்ற பேச்சாளர்கள், ஆன்மீக சொற்பொழிவாளர்கள் ஆன்மீகம் சார்ந்த நிகழ்ச்சிகள் கண்டு களித்துக் கொண்டிருந்தோம் என தெரிவித்தார்.
தமிழகத்தில் தேச விரோத ஆட்சி நடைபெற்று வருகிறது, அடுத்த வருடம் இந்த ஆட்சி அகற்றப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியது குறித்தான கேள்விக்கு,
தேச விரோத சக்திகள் எப்போதும் அப்படிதான் சொல்லிக் கொண்டிருக்கும். அதைப் பற்றி கவலைப்படவில்லை. மக்களுக்கான ஆட்சி மக்களுக்கான கட்சி மக்களின் முதல்வர் தலைமையில் செயல்படக்கூடிய அரசு எங்கும் எந்த வகையிலும் இனத்தால், மொழியால், மதத்தால் பிளவு படுத்துகின்ற சூழல் வருகின்ற போது இரும்பு கரம் கொண்டு அடக்குகின்ற முதல்வர் இரும்பு மனித முதல்வர் எனவும் இந்த ஆட்சி தேச விரோத ஆட்சி இல்ல தேசிய ஆட்சி இந்த ஆட்சி எனவும் தெரிவித்தார்.