தமிழ்நாடு

ஊழல் நிரூபிக்கப்பட்டால் அரசியலில் இருந்து நான் விலகத் தயார்...நிரூபிக்காவிட்டால் நிதி அமைச்சர் விலகுவாரா?

Tamil Selvi Selvakumar

அதிமுக ஆட்சியின்போது கூட்டுறவுத் துறையில் 15 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அரசியலில் இருந்து விலகத் தயார் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ சவால் விடுத்துள்ளார்.

மதுரையில், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் 29-ம் தேதி  நடைபெற உள்ள பொதுக் கூட்டத்திற்கான முன்னேற்பாட்டு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜு, கடந்த ஆட்சியில் கூட்டுறவுத் துறையில் 15 ஆயிரம் கோடி ஊழல் நடந்ததாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறிய குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அரசியலில் இருந்து நிச்சயமாக விலகத் தயார் என்றார்.

ஆனால் முறைகேடு நிரூபிக்கப்படவில்லை  என்றால் நிதி அமைச்சர் அரசியலில் இருந்து விலகி கொள்ள தயாரா என்றும் கேள்வி எழுப்பினார்.