தமிழ்நாடு

”பல வருடங்களுக்கு பிறகு கருணாநிதியை நியாபகப்படுத்திய செந்தில் பாலாஜி” ஹெச். ராஜா!

Tamil Selvi Selvakumar

அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு உயர்தர சிகிச்சை அளிக்க வேண்டும் என பாஜக முன்னாள் தேசிய செயலர் எச்.ராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார். 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்திந்த பாஜக முன்னாள் தேசிய செயலர் எச்.ராஜா, முறையான ஆதாரங்கள் திரட்டிய பிறகுதான் அமலாக்கத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்துள்ளதாக கூறினார்.  மேலும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது, 20 ஆண்டுகளுக்கு முன்பு கருணாநிதியை போலீசார் தூக்கி சென்றது நினைவுக்கு வருவதாக தெரிவித்தார். ஆகவே, அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு உயர்தர சிகிச்சை அளிக்க வேண்டும் என வேண்டுகோள் கொடுத்தார். 

தொடர்ந்து பேசிய அவர், தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு திமுக மக்களின் தயவை பெற விரும்புவதாகவும், மத்திய அரசுக்கு எதிராக பேசினால் ஆதரவு கிடைக்கும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.