uthayanidhi, e.v velu, k.n nehru  
தமிழ்நாடு

“யார் எதிர்க்கட்சி தலைவர்?” - திமுகவில் நடக்கும் தீவிர ஆலோசனை.. முதலைமைச்சர் பதவியை ராஜினாமா செய்யும் ஸ்டாலின்!

ஸ்டாலின் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து கடிதத்தை ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்க...

Mahalakshmi Somasundaram

2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ள நிலையில், திராவிட முன்னேற்ற கழகம் சட்டமன்ற எதிர்க்கட்சியாக அமைய உள்ளது. முதலமைச்சராக இருக்கும் மு.க ஸ்டாலின் அவர் போட்டியிட்ட தொகுதியில் தமிழக வெற்றி கழக வேட்பாளரிடம் தோல்வி அடைந்த நிலையில் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவராக யார் பொறுப்பேற்க உள்ளனர் என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதேபோல , எதிர்கட்சி துணை தலைவர் , கொறடா , போன்ற பொறுப்புகளுக்கு யாரை தேர்வு செய்ய இருக்கிறார்கள் என்பது குறித்து கழக நிர்வாகிகளுடன் ஸ்டாலின் தொடர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றுள்ள நிலையில் அவரை எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பு வழங்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் திமுகவின் மூத்த தலைவர்களான முன்னாள் அமைச்சர்கள் கே என் நேரு, ஏ.வ வேலு, ஐ பெரியசாமி ஆகியோரும் சட்டமன்ற உறுப்பினர்களாக வெற்றி பெற்றுள்ள நிலையில் இதில் கே என் நேரு, அல்லது ஏ.வ வேலு, ஆகியோரில் ஒருவருக்கும் எதிர்கட்சி தலைவர் பொறுப்பு வழங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் சட்டமன்றதில், கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் கட்சியின் கொள்கைப்படி, தலைமை உத்தரவுக்கு இணங்க வாக்கெடுப்பில் கலந்து கொள்வதையும், ஓட்டளிப்பதையும் உறுதி செய்யும் பொறுப்பான கொறடா பதவி ஐ.பெரியசாமிக்கு வழங்க வாய்ப்பிருப்பதாக தெரியவந்துள்ளது. மேலும் , இன்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து கடிதத்தை ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.

இந்நிலையில் தனது சொந்த தொகுதியிலேயே தோல்வியுற்ற முதலமைச்சர் தனது x தள பக்கத்தில் இருந்து முதலமைச்சர் என்ற பெயரை நீக்கம் செய்து திராவிட கழக தலைவர் என மாற்றி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் எதிர்க்கட்சி தலைவராக யார் பொறுப்பு யாருக்கு வழங்கப்படயுள்ளது என்பதை பொறுத்து திமுகவில் உட்கட்சி பூசல் ஏற்பட வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.