மன்னை அரசு கலைக் கல்லூரியில் படிக்கும் முதலாம் ஆண்டு மாணவன் அபினேஷ் என்பவர் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு உரிய மரியாதை கொடுக்காததால், முதலாமாண்டு மாணவன் அபினேஷை கண்டித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று மாலை கல்லூரி முடிந்ததும் வீட்டிற்கு செல்ல பேருந்து நிலையத்தில் காத்திருந்த அபினேஷை 2-ம் ஆண்டு மாணவர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதற்கு காரணம் ஈவ்டீசிங் குறித்து கல்லூரி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் விட்டதால்தான் தற்போது மாணவர்கள் தாக்கிக்கொண்டதாக புகார் எழுந்துள்ளது.