கொளத்தூர் தொகுதியில் தோல்வியை தழுவிய திமுக  கொளத்தூர் தொகுதியில் தோல்வியை தழுவிய திமுக
தமிழ்நாடு

"ஸ்டாலினின் கோட்டையை தகர்த்த வி.எஸ்.பாபு!" கொளத்தூர் தொகுதியில் தோல்வியை தழுவிய திமுக

திமுகவின் கோட்டையாக விளங்கிய கொளத்தூர் தொகுதியில் திமுக தோல்வியைத் தழுவியுள்ளது.

Vinvizhi Leninton

2026 சட்டமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த வாக்கு எண்ணிக்கையில் பல தொகுதிகளில் தவெக முன்னிலையில் இருந்து வருகிறது. தற்போது திமுகவின் கோட்டையான கொளத்தூர் தொகுதியில், மு.க. ஸ்டாலின் பின்தங்கியுள்ளார் என்பதை ஆரம்பகட்ட வாக்குப்பதிவு காட்டுகிறது. மேலும், கொளத்தூர் தொகுதியில் டி.வி.கே. கட்சியைச் சேர்ந்த வி.எஸ். பாபு முன்னிலையில் உள்ளார் என்றும் கூறுகிறது. விஜய்யின் தவெக கட்சி, கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராக வி.எஸ். பாபுவை வேட்பாளராக நிறுத்தினர். வட சென்னையில் உள்ள ஏழு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றான கொளத்தூர், நீண்ட காலமாக திமுகவின் கோட்டையாக இருந்து வந்தது. இத்தொகுதி கடந்த 15 ஆண்டுகளாக முதல்வர் ஸ்டாலினின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஸ்டாலின் , 2011 முதல் கொளத்தூர் தொகுதியைத் தன்வசம் வைத்துள்ளார். 2021 தேர்தலில், அதிமுகவின் ஆதி ராஜாராமை 70,384 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து தனது வெற்றி முத்திரையை ஆழமாக பதித்தார் என்று என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

தவெக-வின் வி.எஸ். பாபு, மு.க. ஸ்டாலினை விட 7738 வாக்குகள் என்ற மிகப்பெரிய முன்னிலையுடன் தற்போது முதலிடத்தைக் கைப்பற்றி வெற்றிபெற்றுள்ளார். தனது கொடையாக விளங்கிய கொளத்தூரில் ஸ்டாலின் தோல்வியை சந்தித்துள்ளார். இந்த தோல்வி ஸ்டாலினின் 'திராவிட மாடல்' அரசுக்கு நேர்ந்த மிகப்பெரிய சவாலாகவேப் பார்க்கப்படுகிறது. ஒரு காலத்தில் திமுகவின் வட சென்னை மாவட்ட செயலாளராகவும், வாடா சென்னையை தனது கட்டுப்பாட்டில் வைத்தவர்தான் வி.எஸ்.பாபு. 2011ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலின் வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது அவர் வெற்றி பெற முக்கிய தளபதியாக விளங்கியவர் வி.எஸ்.பாபுதான் என்றும் கூறப்படுகிறது. தற்போது தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் திமுகவின் முக்கிய புள்ளிகள் தவெகவின் வேட்பாளர்களால் எளிமையாக தோற்கடிக்கப்பட்டு வருகின்றனர்.

அதில் முக்கியமாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தோற்கடிக்கப்பட்டது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மதுரையில் பி.டி.ஆர் போன்ற பெரும் புள்ளிகளும் தோற்கடிக்கப்பட்டிருப்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது உள்ள சூழலில் தவெக மிகப்பெரிய வெற்றியை பெற்றிருப்பதோடு திமுக கணிப்புகளுக்கு அப்பாற்பட்ட எதிரிபார்க்காத தோல்வியை சந்தித்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்