தமிழ்நாடு

திமுக ஆட்சியில் ஜனநாயக முறைப்படி போராடக் கூடாதா? ஜெயகுமார் கேள்வி!

Tamil Selvi Selvakumar

திமுக ஆட்சியில் ஜனநாயக முறைப்படி போராட்டம் செய்வதற்கு கூட அனுமதி இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை ராயபுரத்தில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் போதை இல்லா சமுதாயம் என்ற தலைப்பில் பள்ளி மாணவர்கள் பேரணியை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் துவக்கி வைத்தார்.

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஜெயக்குமார், திமுக ஆட்சியில் ஜனநாயக முறைப்படி போராட்டம் செய்வதற்கு கூட அனுமதி இல்லை என்று குற்றம் சாட்டினார்.