இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றி காத்திருப்பதாக திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
வரும் 31 ஆம் தேதி நடைபெறும் இந்தியா கூட்டணி கூட்டம் முக்கிய முடிவுகள் எடுக்கக்கூடிய கூட்டமாக அமையும் என கூறினார். மேலும் பாஜகவின் வெற்றியை தடுத்து நிறுத்துவோம் என்றார்.
இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றி காத்திருக்கிறது அதைத்தான் முதலமைச்சர் மறைமுகமாக சொல்லி இருக்கிறார்.
பாஜக வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது சொல்கிறார்கள் பிரதமருக்கு பேச தெரியாதா என்ன?
31 ஆம் - இந்தியா கூட்டணி கூட்டம் மிக பெரிய எதிர்பார்ப்புடன் முக்கிய முடிவுகள் எடுக்கக்கூடிய கூட்டமாக இருக்க போகிறது. 2024 ஆண்டு தேர்தலில் எப்படி செயல்பட போகிறோம் என்ற முடிவுகளை எடுக்கக்கூடிய ஒரு முக்கியமான கூட்டம்”, என்றார்.