தமிழ்நாடு

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் சைலண்டாக அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!!

தமிழகத்தின் 14 மாவட்டங்களில் தினசரி கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், தமிழக அரசு விழிப்புடன் இருக்க வேண்டும் என ரவிக்குமார் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.

Malaimurasu Seithigal TV

தமிழகத்தின் 14 மாவட்டங்களில் தினசரி கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், தமிழக அரசு விழிப்புடன் இருக்க வேண்டும் என ரவிக்குமார் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகை, நீலகிரி, தூத்துக்குடி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை முந்தைய நாளை விட சற்று அதிகரித்திருப்பதை சுட்டிக் காட்டியுள்ளார். திருவண்ணாமலையில் நேற்று 125 ஆக இருந்த புதிய நோயாளிகளின் எண்ணிக்கை இன்று 199 ஆக உயர்ந்துள்ளதையும், விழுப்புரத்தில் 52 இல் இருந்து 65 ஆக அதிகரித்துள்ளதையும் குறிப்பிட்டுள்ள அவர், ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு 14 மாவட்டங்களில் தொற்று அதிகரிப்பது மிகவும் கவலைக்குரியது எனவும் தெரிவித்துள்ளார்.