தமிழ்நாடு

குளறுபடிகள் நீக்கப்பட்டு...ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெறும் - அமைச்சர் பெரியகருப்பன்!

Tamil Selvi Selvakumar

கூட்டுறவு சங்க வாக்காளர் பட்டியல்களில் உள்ள குறைகள் நீக்கப்பட்டு தேர்தல் நடத்தப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் கூறியுள்ளார். 

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற மாற்று திறனாளிகள் நலத்துறை, சமூக நலத்துறை மற்றும் குடிமைப்பொருள் வழங்கல் துறை சார்பில் நிகழ்ச்சியில் பங்கேற்ற கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

இதற்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கூட்டுறவு சங்க தேர்தல் குறித்த கேள்விக்கு பதிலளித்தார். அப்போது பேசியவர், கூட்டுறவு சங்க வாக்காளர் பட்டியலில் உள்ள குறைகளை சரி செய்யும் பணிகள் தொடங்கியுள்ளதாகவும், அதிலுள்ள குளறுபடிகளை நீக்கி ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என்றும் கூறினார்.